நாடு முழுவதும் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு கூடுதல் வசதி அளிக்கும் வகையில் நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக கோவை, சண்டிகர், குருகிராம், புனே, ராஞ்சி உட்பட சில நகரங்களில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. தாங்கள் சேவை பெறும் எண்ணை நிறுவனங்களின் வலைத்தளங்கள், மொபைல் செயலி மூலம் இந்த சேவையை வீட்டில் இருந்து இலவசமாக பெறலாம்.
Categories