Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்கணுமா?…. உண்மையான விதிமுறை என்ன தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மே மாத தொடக்கத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு சிலிண்டர் ரூ.1015 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள் 80 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால் இதில் உண்மையான சிஸ்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக டெலிவரி ஊழியரிடம் விசாரித்தபோது, சிலிண்டர் டெலிவரிக்கு தனி கட்டணம் எதுவும் கிடையாது, நாம் செலுத்தும் சிலிண்டர் கட்டணத்திலேயே டெலிவரி கட்டணமும் உள்ளடங்குகிறதுஎனவே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். நாம் டெலிவரி ஊழியர்களுக்கு கொடுக்கும் கட்டணம் நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் டிப்ஸ் மட்டுமே.

எனவே முறைப்படி டெலிவரி கட்டணம் கிடையாது என டெலிவரி ஊழியர் விளக்கம் அளித்துள்ளார். இருந்தாலும் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே டெலிவரிக்கு கட்டணம் கிடையாது,ஐந்து கிலோமீட்டருக்கு மேல் டெலிவரிக்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்,5 கிலோ மீட்டருக்குள் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர் கூடுதல் பணம் கேட்கிறார்கள் என்பதை மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். டெலிவரி இல்லாமல் நாமாக சென்ற சிலிண்டரை பெற்றுக்கொண்டால் கட்டணத்தை குறைக்க முடியும்.

Categories

Tech |