அமேசான் பே மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அன்றாடத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்று கேஸ் சிலிண்டர். அதனை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் தே மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கேஸ் பேக்கை பெறுவதற்கு அமேசான் ஆப் மூலம் கிளீனர் முன்பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ.785 ஆக விற்பனையாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அறியாத மக்கள் அறிந்து கொண்டு 50 ரூபாய் சலுகையை பெற்றுக் கொள்ளுங்கள்.