Categories
தேசிய செய்திகள்

கேஸ் விலையை திடீரென உயர்த்திய மாநில அரசு…. விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மும்பையில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சிஎன்ஜி, பிஎன்ஜி கேஸ் விலை உயர்வு அமுலுக்கு வருவதாக மாநகராட்சி லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 வாரங்களுக்கு முன்னர் சிஎன்ஜி, பிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய விலை உயர்வின் படி மும்பையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு SMC 1.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை மெட்ரோ பகுதிக்கு மட்டும் இந்த விலை உயர்வு பொருந்தும். புதிய விலை உயர்வின் படி மும்பையில் 1
கிலோ சிஎன்ஜி விலை 63.50 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிஎன்ஜி ஒரு SCM விலை 38 ரூபாயிலிருந்து 39.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வின் காரணமாக மும்பையில் உள்ள சுமார் 8 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |