Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின்’ தடுப்பூசி… அரசியல் செய்யுறாங்க… தவறான தகவல் பரப்புறாங்க – பாரத் பயோடெக்

கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை பரப்பி, சிலர் அரசியல் செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணா எலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணா எலா, இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், ஏற்கனவே 16 தடுப்பூசிகளை தயாரித்த அனுபவம் தங்களுக்கு இருப்பதாகவும், 123 நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரதச்சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் 200 சதவீதம் பாதுகாப்பானது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளதாகவும், கோவாக்சின் குறித்து தவறான தகவல் பரப்பி ஒருசிலர் அரசியல் செய்வதாகவும், தனது குடும்பத்தை சேர்ந்த எவரும், எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயல்படவில்லை என்றும் திரு. கிருஷ்ணா எலா குறிப்பிட்டார்.

Categories

Tech |