Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கே.எல் ராகுல் அரைசதம் வீண்….. பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..!!

பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறது.. உலகக் கோப்பையின் பிரதான லீக் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 4 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் 2  பயிற்சி போட்டிகளிலும், அக்டோபர் 17 ல் ஆஸ்திரேலியா மற்றும் அக்டோபர் 19ல் நியூசிலாந்து அணியையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

இதில் முதலில் மேற்கு ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவதாக மீண்டும் அதே மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி மேற்கு ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப் மற்றும் டி’ஆர்சி ஷார்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர்..

ஜோஷ் பிலிப் 8  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த நிக் ஹாப்சன் – டி’ஆர்சி ஷார்ட்  இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்த நிலையில், இருவருமே அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிக் ஹாப்சன் 64 ரன்களிலும், டி’ஆர்சி ஷார்ட் 52 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ரன் விகிதம் குறைந்தது. இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். இதனால் 15 – 20 ரன்கள் வரை அந்த அணி குறைவாகவே எடுத்தது. இறுதியில் மேற்கு ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் களமிறங்கினர். இதில் ரிசப் பண்ட் 9 ரன்களில்  அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த ஹூடா 6, ஹர்திக் பாண்டியா 17,  அக்சர் படேல் 2, தினேஷ் கார்த்திக் 10 என அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் மறுமனையில் கேஎல் ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடினார்.

கடைசியில் ராகுலும் 55 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 74 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அஸ்வின் 3, அக்சர் படேல் 2, ஆர்ஷ்தீப் சிங் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ரோகித் சர்மா, விராட் கோலி, சஹல், ஆர்ஷ்தீப் சிங் சிங், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை..

Categories

Tech |