நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எல்பி டபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்தபின் கேஎல் ராகுல் அவுட் இல்லை என்பது ரீபிளேவில் தெரியவந்தது.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கி ஆட்டத்தை தொடங்கினார்.
இதில் மீகெரென் வீசிய 3ஆவது ஓவரில் கே எல் ராகுல் 9 ரன்னில் இருந்தபோது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதையடுத்து கோலியுடன் ரோகித் சர்மா கை கோர்த்தார். இருவரும் பொறுமையாக தொடங்கிய நிலையில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.அதன்பின் ரோஹித் சர்மா 39 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 12 ஓவரில் 84/2 என இருந்தது. இதையடுத்து சூரியகுமார் யாதவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து கடைசி ஓவரில் இந்திய அணி 17 ரன்கள் எடுத்தது. அதில் கடைசி பந்தை சூர்யகுமார் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை பதிவு செய்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. விராட் கோலி 44 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 51 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியலில் (4 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் தொடக்க வீரர் கே எல் ராகுல் 9 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பி டபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் களத்தில் இருந்த கே எல் ராகுல் டி.ஆர்.எஸ் கேட்கவில்லை. அவுட் தான் என நினைத்து களத்தில் இருந்து வெளியேறி விட்டார்.. அதன் பின் தொலைக்காட்சி ரீப்பிளேவில் பார்க்கும் போது அவர் அவுட் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.
எனவே அவர் கேட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது வருத்தத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எதிரே நின்ற ரோகித் சர்மாவும் அதனை சரியாக கவனிக்கவில்லையா? ஏன் ரோஹித் ரிவியூ கேட்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் ராகுல் டி.ஆர்.எஸ் ல் அவுட் ஆகவில்லை என்றால் சிறப்பாக விளையாடி இருப்பாரா? என்றும் அவரை சில ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/kunaalyaadav/status/1585536310810333184