Categories
விளையாட்டு

கே.எல்.ராகுல் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி…. உண்மை இதுதான்…. அதியா வெளியிட்ட டுவிட்….!!!!

இந்திய வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான அதியாவை காதலித்து வருகிறார்.இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அதியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாக உள்ளது என்பது போல கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக மே மாதம், அதியாவின் சகோதரர் திருமண வதந்தி குறித்து கூறுகையில். “கல்யாணத்தைப் பொறுத்த வரையில் எந்த ஏற்பாடுகளும் நடக்கவில்லை. அப்படி ஒரு விழாவும் இல்லை, இதெல்லாம் வதந்திகள். கல்யாணமே இல்லாதபோது, ​​நாங்கள் உங்களுக்கு எப்படி தேதி கொடுப்பது?” என  கேள்வி எழுப்பியிருந்தார்.

Categories

Tech |