கே.ஜி.எஃப் படக்குழுவின் அடுத்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
பிரபல நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் நாள் வசூல் சாதனை இந்திய அளவில் 134.5 கோடி என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது கே ஜி எஃப் 2 படத்தின் முடிவில் கே.ஜி.எஃப் 3 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.