Categories
சினிமா தமிழ் சினிமா

கே ஜி எஃப் 2 படத்தில் யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!!

விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையைமுன்னிட்டு 2018ம் ஆண்டு  வெளியானது. இப்படங்களுடன் கன்னட படமான KGF படமும் வெளியானது.முதலில் இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த படத்தின் விமர்சனங்களினால்  ரசிகர்கள் மெல்ல மெல்ல ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். படம் பார்த்த அனைவருக்கும் இந்த படம் பிடித்துப்போக நடிகர் யாஷை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

ஒரு தமிழ் நடிகருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவிற்கு வரவேற்பு வரவேற்பை நடிகர் யாஷிற்கும் தந்தனர் தமிழ் ரசிகர்கள். இந்நிலையில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை போலவே இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ளதாம்.

அதிகாலை 4 மணிக்கு இந்த படம் திரையிடப்பட்டது. மேலும் தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியான  விஜய்யின் பீஸ்ட் படத்துடன் இந்த படமும் வெளியானது. என்னதான் நடிகர் விஜய் அளவிற்கு இல்லை என்றாலும்  நடிகர் யாஷையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில் கேஜிஎப் 2 படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர் யாஸ் KGF  2 படத்தில்  25 கோடி முதல் 27 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு இவரின் சம்பளம் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாககும்.

Categories

Tech |