விஜயின் பீஸ்ட் பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் குறித்த பேச்சுக்கள் தான் இன்னும் இணையதளம் முழுவதும் நிரம்பி வழிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன்குமார். இப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ மற்றும் இயக்குனர் செல்வராகவன் போன்றோர் நடித்துள்ளனர்.விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கே.ஜி.எப் 2 அதற்கு மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படத்திற்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ’கேஜிஎஃப்’. இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்க்காக காத்து கொண்டிருக்கிறது.நடிகர் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கேஜிஎப் 2 படத்தை காட்டிலும் விஜய் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஐஎம்டிபி வலைதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பீஸ்ட் படத்தை ஆர்வம் 40.3 சதவிகிதம் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், 31.7 சதவிகிதம் ரசிக்கள் கேஜிஎப் 2 படத்தை ஆர்வம் காட்டுவதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த டேட்டாவின் படி ‘பீஸ்ட்’ படம் முதல் இடத்தையும், கேஜிஎப் 2 இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.