நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனால் ரசிகர்கள் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் படம் பார்க்கும் கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் சில நடிகர்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தங்கள் படங்களை ஓடிடி-யில் வெளியிடவே ஆர்வம் காட்டி வருகின்றன.
இது திரையரங்கு உரிமையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் மாஸ்டர் போன்ற சில படங்கள் வெளியானால் திரையரங்கில் மட்டுமே வெளியிடப்படும் என்று காத்திருந்து ரசிகர்களுக்காக திரையில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாவது வழக்கமாக மாறி விட்டது. மாஸ்டர் மற்றும் மாநாடு போன்ற படங்கள் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியிடப்பட்டது.
அவ்வகையில் தற்போது யாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் கே ஜி எஃப் 2 திரைப்படம் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.