இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸின் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.