யஷ் நடிப்பில் வெளியாகிய கே.ஜி.எப் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமானது அடுத்ததாக காந்தாரா திரைப்படத்தை தயாரித்தது. இப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்று, வசூலை குவித்தது. இந்நிலையில் தன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை ஹோம்பலே வெளியிட்டு இருக்கிறது.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக டிரைக்டர் சுமன்குமார் இயக்கத்தில் உருவாகும் “ரகு தாத்தா” என்ற படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இதற்கான சூட்டிங் வேலைகள் தொடங்கி இருக்கிறது.