கே.ஜி.எப்-2 படத்தில் நடித்துள்ள நடிகரின் பிறந்தநாளுக்காக படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, ராமச்சந்திர ராஜு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.
https://twitter.com/prashanth_neel/status/1399225986776899587
சமீபத்தில் கே.ஜி.எப்-2 படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கே.ஜி.எப்-2 படத்தில் இனாயத் கலீல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலகிருஷ்ணா நீலகண்டபுரத்திற்கு இன்று பிறந்தநாள். மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கே.ஜி.எப்-2 படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.