அதிகாரம், பதவி, செல்வாக்கு பயன்படுத்தி ஒரு சிலர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பாஜக பொதுச் செயலாளர் கே.டி ராகவன் அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு வீடியோகால் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று அவர் பல பெண்களிடம் அத்துமீறி ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த கே.டி ராகவன் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவர் உட்பட பாஜகவினர் யார் யாரால் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது என்பதை காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.