பாஜக பொதுச்செயலாளர் ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேசிய பாஜகவிலும் சரி, தமிழக பாஜகவிலும் சரி, எனக்கென உரிய மரியாதை கொடுக்கப்பட்டது தான் வருகின்றது. ஆனால் இங்கு நடந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதை கட்டாயம் விசாரிக்க வேண்டும். அதற்காக பாஜகவில் பெண்களை யாரும் மதிப்பதே கிடையாது என்று ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
அது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. பாஜகவில் ஏராளமான பெண்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்கள்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” இத்தனை நாட்களாக ஒரு டிவி விவாதம் கூட முழுமையாக பார்க்க வில்லை. ஆனால் சேர்த்து வைத்து என்று எக்கச்சக்கமாக பார்த்துவிட்டோம். இந்த கண்றாவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவிப் பெண்களை நினைத்தால்…” என்று பதிவிட்டு வருத்தமான ஏமோஜி ஒன்றையும் அதில் சேர்த்துள்ளார்.