கே.டி ராகவன் வீடியோ வெளியான நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.. இதனை பார்த்த வலைதள வாசிகள் ராகவனா இப்படி என்று பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவந்தனர்.. இந்த வீடியோவை பாஜக பிரமுகரும், யூடியூபருமான மதன் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக தெரிவித்தார்..
இதையடுத்து, என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என்று கே.டி ராகவன் ட்விட் செய்திருந்தார்..
இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்..
அறிக்கை இதோ :
அதனை தொடர்ந்து ‘Madhan Diary சேனல் நடத்தி வந்த மதன் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த வெண்பா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அறிவித்தார். இதையடுத்து அவரது யுடியூப் சேனலும் முடக்கப்பட்டது.. இது ஒருபுறம் இருக்க, மாநிலச் செயலாளர் மலர்க்கொடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு மதனும், வெண்பாவும் ஒத்துழைப்பு தருவதாக பாஜக அறிக்கை சொல்கிறது..
இதற்கிடையே மதன் வேறு ஒரு சேனலை ஓபன் செய்து அதில், அண்ணாமலையின் ஒப்புதலின் பேரில் தான் வீடியோ வெளியானது, ஆனால் அறிக்கையில் வேறு மாதிரி குறிப்பிட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது காட்டமான கருத்துக்களை கூறி வருகின்றனர்..
இந்த நிலையில் சென்னையில் முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவரும், தற்போது மத்திய இணையமைச்சராக இருக்கக்கூடிய எல். முருகனை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகமும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்..