Categories
அரசியல்

கே.டி ராகவன் பாலியல் விவகாரம்…. அண்ணாமலை மீது புகார்…? மதன் வைக்கும் குற்றசாட்டு…!!!

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ  வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி நீக்கியது. இந்நிலையில் இது தொடர்பாக டிஜிபி அலுவலகம், உள்துறைச் செயலாளர் தமிழ்நாடு பெண்கள் ஆணையம் ஆகியவற்றில் யூடியூபர் மதன் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வீடியோவுடன் சென்று உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் பல காரணம் காட்டி நடவடிக்கை எடுக்க அண்ணாமலை தவறி விட்டார் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால், வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்துள்ள மதன், இதுபோன்று வீடியோ வெளியிடுவது, இந்திய தண்டனைச் சட்டம் 509, 354 ஏ, 293 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 ஏ ஆகியவற்றின் கீழ் குற்றம் என்றாலும் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, இது தொடர்பான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |