Categories
அரசியல் தேசிய செய்திகள்

கே.டி ராகவன் விவகாரம்: நாட்டை காக்க…. ஓட ஓட விரட்டணும்…. கொந்தளித்த காங்கிரஸ்…!!!

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ  வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி நீக்கியது. கே.டி ராகவனின் இந்த வீடியோ வெளியானதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பழைய வண்ணாரப் பேட்டை அருகில் காங்கிரஸ் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கே.டி ராகவன்  மீதான பாலியல் குற்றத்தை கண்டித்தும், இதற்கு தனிக்குழு அமைத்து விசாரிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பாஜகவிடம் இருந்து இந்த நாட்டைக் காக்க வேண்டும். பாஜக நிர்வாகிகளை ஓட ஓட விரட்ட வேண்டும். உள்ளே ஒரு நாடகம் வெளியே ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Categories

Tech |