Categories
அரசியல்

கே.பாலகிருஷ்ணன் உடல்நிலை… நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனின் உடல்நிலை குறித்து முதல்வர் நேரில் சென்று விசாரித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். கே. பாலகிருஷ்ணன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது .மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் அருகிலுள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சீரானது. மேலும் நேற்று அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டது, அதில் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சன் ஆகியோர் பாலகிருஷ்ணனை நேற்று முன்தினம் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவருடன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே சேகர் மற்றும் சில மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Categories

Tech |