கேரளாவில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களும் ஆர்வமுடன் வாக்குகளை பதிவிட்டு செல்கின்றனர். மேலும் கேரள சட்டமன்ற தேர்தலில் தற்போது வரை 52.2 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பாலக்காட்டில் ஆத்தூர் அருகே உள்ள பெரியகுளம் வாக்குச்சாவடியில் கைகள் இழந்த இளைஞர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார்.
அப்போது அவருக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் கைகள் இல்லாததால் கால்களில் மை வைத்துள்ளனர். கைகள் இழந்த நிலையில் ஜனநாயக கடமையாற்ற வந்த அந்த இளைஞரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.