உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான கொரோனா விதிமுறைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் வெளியிட்டுள்ளார். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கொரோனா பரவாமலிருக்க தங்களது பதக்கங்களை தாங்களே கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும். கைகுலுக்கல் இருக்கக் கூடாது, கட்டிப்பிடிக்கவும் கூடாது என்று அறிவித்துள்ளார்.