கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நாம் அன்றாட சாப்பிடும் வெள்ளை சாதத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட கைக்குத்தல் அரிசியில் தான் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ஒரு மாதத்திற்கு நாம் அன்றாட உணவில் வெள்ளை சாதத்திற்கு பதிலாக இந்த கைக்குத்தல் அரிசியை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
ஏனென்றால் நாம் அன்றாட சாப்பிடும் வெள்ளை சாதத்தில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளதால், இது நம் உடல் எடையை அதிகரிக்க தான் செய்கிறது. மேலும் வெள்ளை சாதத்தை தவிர்த்து கைக்குத்தல் அரிசி சேர்த்து கொண்டால் தொப்பை வருவதை தடுக்கலாம். ஏனென்றால் வெள்ளை சாதத்தை விட கைக்குத்தல் அரிசியில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகிய இரண்டும் குறைவான அளவில் இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.