Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கைக்குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல்….. மருத்துவர்கள் அளித்த புகார்….. போலீஸ் விசாரணை…!!

குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள குருவன்கோட்டை பகுதிகளில் ராஜ்-சீதாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சீதாலட்சுமிக்கு கடந்த 24 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை ஆலங்குளத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததாகவும், நெற்றியில் காயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |