இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌதமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டு அறிவழகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கைக்குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கௌதமி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனை அடுத்து கௌதமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.