உத்திரப்பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி குழந்தை பிறந்து 14 நாட்களில் தனது பணிக்குத் திரும்பிய சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகள் ஒன்றிணைந்து அரசு அதிகாரிகளும் இரவுபகலாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சௌமியா பாண்டே என்பவர் துணை கலெக்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நோடல் அதிகாரியாக அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் அனைவரும் ஆறு மாத காலம் வரை பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அவர் 14 நாட்களில் தனது பணிக்கு திரும்பியுள்ளார். தனது கைக்குழந்தையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவரின் உயர்ந்த எண்ணத்தை கண்டு மக்கள் தங்களது பாராட்டுகளை குவித்து வருகின்றன. இதுபற்றி அவர் கூறுகையில், “நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.அதனால் குழந்தை பிறந்த உடனே வேலையை பற்றி சிந்தித்தேன். கொரோனா காலமென்பதால் எனது பொறுப்பு அதிகமாக இருக்கிறது. அனைத்துப் பெண்களும் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கும் வலிமையை கடவுள் அளித்துள்ளார்”என்று அவர் கூறியுள்ளார்.