பிரான்ஸ் நாட்டில் தந்தை ஒருவன் தன் கைக்குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரான்ஸ் நாட்டில் gex(ain) நகரில் வசித்து வந்தா கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் காரணமாக தன்னுடைய கைக்குழந்தையுடன் அங்கிருந்து montargis (loiret ) நகருக்கு சென்றுள்ளார். அந்த நகருக்கு ,முன் அவர் வாழ்ந்து வந்த வீட்டை பார்க்கச் சென்றார். உங்க வீட்டில் இருந்தவர்களிடம் நான் வாழ்ந்து வீட்டை பார்க்க வந்ததாக கூறியுள்ளார். இவ்வாறு கூறி வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மொட்டை மாடியில் பார்ப்பதாக கூறி 10 வது தளத்திற்கு சென்றார்.
பின் மொட்டை மாடியில் இருந்து தன் கைக் குழந்தையுடன், அவர் கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்யப் போவதை அறிந்த அப்பகுதி மக்கள், விரைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு வருவதற்குள், இருவரும் மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் சம்பவத்திற்கு முன் அவரின் மனைவி குழந்தையை கடத்திச் சென்றுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.