திரையுலகில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் என இவர்களின் லிஸ்டில் தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தங்களது திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்துள்ளனர். இவர்களது திருமணம் சென்ற நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடந்தது.
இதையடுத்து திருமண செய்த ஜோடியை நேரில் சந்தித்து பிரபலங்கள் பல பேரும் வாழ்த்து கூறி வந்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த சூழ்நிலையில், மஞ்சிமா மோகன் பேட்டி அளித்துள்ளார். அப்போது, அவரிடம் ஹனிமூன் எங்கே? என கேட்கப்பட்டது. அதற்கு அவர், கௌதம் நடித்து வரும் பத்துதல பட வேலைகள் அனைத்தும் உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின்போது ஹனிமூன் செல்ல முடிவுசெய்து இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.