Categories
தேசிய செய்திகள்

கைதாவதற்கு முன் சஞ்சய் ராவத்தின் பாச போராட்டம்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் எம்பியான சஞ்சய்ராவத் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் நில மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்கதுறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையில் அவரது வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 20 முதல் 22 அதிகாரிகள் வரை சென்று நடத்திய சோதனையில் ரூபாய்.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை அமலாக்கதுறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இருப்பினும் சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் விக்ராந்த் சப்னே கூறியதாவது, சஞ்சய் ராவத் கைது செய்யப்படவோ (அல்லது) பிடித்து செல்லப்படவோ இல்லை. அமலாக்கதுறை அலுவலகத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்யவே வந்துள்ளார் என்று கூறினார். இந்த நிலையில் சஞ்சய்ராவத்திடம் அமலாக்கதுறையின் விசாரணை நள்ளிரவு வரையிலும் நீடித்தது. அதன்பின் இதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு சஞ்சய்ராவத் கைது செய்யப்பட்டாலும் அவர் தலை வணங்கமாட்டார்.

இதற்கிடையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அத்துடன் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்று அவரது சகோதரர் சுனில்ராவத் கூறினார். இந்நிலையில் சஞ்சய்ராவத் அமலாக்கதுறை அதிகாரிகளால் அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு அவரது வீட்டிலிருந்து புறப்படும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அவர் தன் தாயை தேற்றிவிட்டு புறப்படுகிறார். சஞ்சய்ராவத்துக்கு அவரது தாயார் ஆரத்தி எடுத்து திலகமிட்டார். மேலும் தாயின் காலில் விழுந்து ராவத் வணங்கினார். அதனை தொடர்ந்து தன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர் கிளம்பி சென்றார்.

Categories

Tech |