Categories
மாநில செய்திகள்

கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ளது. சுமார் 23 ஆயிரத்து 592 கைதிகள் வரை அடைத்து வைக்க கூடிய இந்த சிறையில் தற்போது வெறும் 18,000 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியேறி வரும் போது, வேலையில் சேர்வதற்கும், தொழில் தொடங்குவதற்காகவும் வங்கி கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்த சிறைத்துறை அதிகாரி டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி கைதிகளுக்கு ஆதார் அட்டை வாங்கி தருவதற்கூறிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சிறைகளில் இருக்கும் ஒவ்வொரு கைதிகளுக்கும் பராமரிக்கப்படும் கைதிகள் அடையாள அட்டை பதிவேட்டை அடிப்படையாக வைத்து ஆதார் அட்டை வழங்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் விதமாக சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கைதிகளுக்கு ஆதார் அட்டை வாங்கிக் கொடுப்பதற்காக  300 பேர்களது கைரேகை மற்றும் புகைப்படம் போன்றவை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறைத்துறை கூறியதாவது,  மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஆதார் அட்டை வாங்கி கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |