Categories
மாநில செய்திகள்

கைதிகளை சந்திக்க கட்டுப்பாடுகள் தளர்வு…. தமிழக சிறைத்துறை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் கைதிகளை அவர்களது உறவினர்கள் வாரம் இருமுறை சந்திக்க அனுமதிக்கப்படுவர். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 3 பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |