கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இதையடுத்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜய் தேவ்கனின் மனைவி கதாபாத்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் கதாநாயகி மற்றும் பாடல்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது .