சேவல் சண்டையின் போது சேவலின் உரிமையாளர் தான் வளர்த்து சேவலின் மூலம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தவாரம் தெலுங்கானாவில் லொதுனூர் எனும் கிராமத்தில் சேவல் சண்டை நடந்து வந்தது. அப்போது சேவலின் உரிமையாளர் தப்பி சென்ற சேவலை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதன் காலில் 7 சென்டிமீட்டர் நீளத்தில் கத்தி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது உரிமையாளரின் கவட்டைப் பகுதியில் ஆழமாக குத்தி கிழித்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அதிக அளவு ரத்தம் போனதன் காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் அந்த சேவலை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். மேலும் காவல்துறையினர் சேவல் சண்டைய இடத்திலிருந்து 15 பேரை கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் சேவலை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளனர். நம் நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை நடத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி பலர் தங்களது கிராமப்புறங்களில் சேவல் சண்டையை நடத்தி வருகின்றனர்.
அதுவும் பண்டிகைக் காலங்களில் சேவல்சண்டை நடத்துவது ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர். தான் வளர்த்த சேவல் மூலமாகவே உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிபதிகள் இது போன்று இனி சேவல் சண்டை நடத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.