கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பொழுது இலங்கை அதிகாரிகள் அவர்களை கைது செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்று வரை இந்த செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்த உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது மீனவர்கள் தெரியாமல் இலங்கையின் எல்லைக்குள் சென்றுள்ளனர். இதனை பார்த்து இலங்கை அதிகாரிகள் 12 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த விளக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த திரிகோணமலை நீதிமன்றம் 12 மீனவர்களையும் விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இதுபோன்று மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.