Categories
தேசிய செய்திகள்

கைது முதல் ஜாமீன் வரை… ஆர்யன் கான் வழக்கு கடந்து வந்த பாதை….!!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் கைதானது முதல் ஜாமின் வரை கடந்து வந்த பாதையைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அக்டோபர் 4ஆம் தேதி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அக்டோபர் 7ஆம்  ஆம் தேதி வரை என்சிபி காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர்.

அக்டோபர் 15ஆம் தேதி வரை என்சிபி காவலுக்கு அவர் வைக்கப்பட்டிருந்தார். பிறகு அவர் ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட வழக்குகள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அவரது மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி  சாம்ப்ரேவிடம்  முறையிடப்பட்டது விசாரணை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 26ஆம் தேதி மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தொடங்கப் பட்டது. அக்டோபர் 28ஆம் தேதி ஆரியன் கானுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவு வழங்கியது.

Categories

Tech |