ஜமீன் ஊத்துக்குளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி 45 நாட்கள் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் ஜமீன்ஊத்துக்குளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு மூலம் கைத்தறி தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முடிந்து சான்றிதழ் பெறுவதற்கு தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பேசியதாவது, கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயதொழில் ஒரு முக்கியமானதாக இருக்கிறது. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் பாரம்பரிய நெசவு தொழிலை விரிவு படுத்துவது. இந்த பயிற்சியில்வருகைப் பதிவு கைரேகை பதிவு வைத்து நடத்தப்பட்டது. மேலும் பயிற்சிக்கு 95% கட்டாயம் வர வேண்டும்.
இதையடுத்து அவரவர் வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசு மூலம் இந்த பயிற்சி முடிவில் 13 ஆயிரத்து 500 ரூபாய் வரவு வைக்கப்படும். மேலும் இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 6 சதவீத வட்டியில் ரூ 50,000 கடன் பெற முடியும். அதில் ரூ 10,000 மானியமாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் நெசவு தொழில் பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த தொழிலை மிகுந்த ஆர்வத்துடன் பெண்கள் கற்கின்றனர்.
மேலும் குடியரசு துணைத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோரின் உருவங்களை கைத்தறி நெசவு மூலம் தயாரித்து பரிசாக அனுப்பினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உருவத்தை கைத்தறி நெசவு மூலம் தயாரித்தனர். முதலில் 45 பேர் பயிற்சி பெற்று அவர்களை கொண்டு உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு நல்ல தரமான பொருட்களை தயாரித்து கொடுக்க திட்டமிடப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.