Categories
உலக செய்திகள்

கைத்துப்பாக்கி வைப்பதற்கான உரிமை முடக்கம்…. எதற்காக தெரியுமா?…. கனடா அரசு அதிரடி…..!!!!

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பள்ளியில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனா். அதாவது உவால்டே நகரில் ரோப் எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் 5 -11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கிசூடு சம்பவம் உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்தநாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால் கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ (அல்லது) இறக்குமதி செய்யவோ முடியாது என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |