Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கைபேசிக்கு வந்த அழைப்பு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்சியில் பரபரப்பு…!!

வீட்டிலிருந்து வெளியே சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள ஆலத்துடையான்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துறையூரில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரேணுகாவிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா உடல்நலக் குறைவினால் உயிரிழந்துவிட்டார். அதன்பின் பிரபு, உஷா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரபு வழக்கம் போல் சவாரி முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது கைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.

அதன்பின் வீட்டை விட்டு கிளம்பிய பிரபு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. கைபேசி மூலம் உஷா அவரது கணவரை அழைக்க முயன்ற போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனையடுத்து ஆலத்துடையான்பட்டி-எம்.ஜி.ஆர். காலனி சாலையில் பிரபு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்ததாக உறவினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபுவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |