சிறுமியை சரமாரியாக தாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் தம்பதியினரை கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் கிராமத்தில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை மர்ம கும்பல் ஒன்று கைபேசியை திருடியதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குலமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்த குற்றத்திற்காக சுப்பிரமணியன், பால்ராஜ், ஞானமணி மற்றும் மலர் ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.