உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராணிகஞ்ச் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வந்தது இந்த கல்லூரியில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அந்த தொகுதி எம்எல்ஏவான டாக்டர் ஆர் கே வர்மா ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டப்பட்டுவரும் சுவற்றில் ஒன்றை தனது ஒற்றை கைகளால் தள்ளும்போது சுவர் இடிந்து கீழே விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்றொரு சுவரையும் தள்ளினார். அதுவும் கீழே விழுந்தது. இதுதொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த கல்லூரியை கட்ட சுமார் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை கூறிவருகின்றனர்.