Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் அரிவாளுடன் ஜெய்… வெறித்தனமாக வெளியான ‘சிவ சிவா’ பர்ஸ்ட் லுக்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சிவ சிவா படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜெய். இதை தொடர்ந்து இவர் ராஜா ராணி, எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரேக்கிங் நியூஸ், குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சிவ சிவா படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் பாலசரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் சிவ சிவா படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குனர் கௌதம் மேனன் டுவிட்டரில்  வெளியிட்டுள்ளார். கையில் அரிவாளுடன் மிரட்டலான லுக்கில் ஜெய் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |