Categories
தேனி மாவட்ட செய்திகள்

கையில் காலணி…. ஆற்றை கடந்த துணை முதலமைச்சர்….மலைவாழ் பகுதிக்கு சென்று ஆய்வு…!!!!

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலைவாழ் மக்கள் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கையில் காலணியுடன் ஆற்றை கடந்த வீடியோ வைரலாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் இருக்கும் மேலப்பரவு கிராமதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற பல்வேறு விவசாய பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே  குரங்கணி – கொட்டகுடி ஆறு பாய்வதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்நிலையில் இங்கு வாழும் பொதுமக்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், மற்றும் கர்ப்பிணிகள் ஆற்றை கடக்க முடியாமல் பல துயரத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் அவர்களின் வீடுகளும் மிகுந்த சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த பகுதிக்கு நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்று மலைவாழ்  மக்களின் குறைகளை கேட்டறிந்த பிறகு 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் உடனடியாக கட்டித்தருமாறு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் சாலைகள் பழுதடைந்திருந்ததால் அதை சரிசெய்து தருமாறு மக்கள் முன்னரே வைத்திருந்த கோரிக்கையை ஏற்று தற்போது அப்பகுதியில் சாலை சரி செய்யும் வேலையை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எனவே தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதால் அவர்கள், துணை முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்ய சென்றபோது, ஆற்றை கடப்பதற்காக  தனது காலில் இருந்த காலணியை கையில் எடுத்த போது உடனிருந்த அவரது உதவியாளர், காலணியை தான் வைத்து கொல்வதாக பலமுறை கூறினார். ஆனால் அவர், “வேண்டாம், நானே வைத்து கொள்கிறேன்” என்று கூறி மறுத்துவிட்டார். இந்நிலையில் காலணியை ஒரு கையில் வைத்து கொண்டே ஆற்றை கடந்து சென்றார். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்டுகளித்த நெட்டிசன்கள் அனைவரும்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.

 

Categories

Tech |