கையில் குழந்தையுடன் நயன்தாரா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கையில் ஒரு குழந்தையுடன் நயன்தாரா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் நயன்தாராவின் அருகில் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.