பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றதன் வாயிலாக பிரபலமான கவின், இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய “லிஃப்ட்” படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் இதை தவிர நெல்சன் இயக்கிய டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
அண்மையில் இவர் நடித்த “ஆகாஷ் வாணி” எனும் வெப்தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. கடந்த 2012-ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மனம் கொத்தி பறவை படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி ஆகிய படங்களை தயாரித்துள்ளது. ஒலிம்பியாமூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புது படத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து கவின் நடித்து வருகிறார்.
இந்த திரைபடத்தை அறிமுகம் இயக்குனரான கணேஷ்கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. “டாடா” எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவின் வெளியிட்டுள்ளார். அவற்றில் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாசகத்துடன் கையில் குழந்தையுடன் கவின் உள்ள போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.