சர்ச்சைக்குரிய போஸ்டரால் புகாரின் பேரில் லீலா மணிமேகலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லீனா மணிமேகலை கவிஞர், எழுத்தாளர், இயக்குனர் என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டவர். இவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆவணப்படம் காளி. இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் தற்பொழுது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த போஸ்டரில் மகாகாளி சிகரெட் பிடிப்பது போலவும் ஒரு கையில் எல்ஜிபிடி கொடியை ஏந்திய படியும் இருக்கிறது. இது கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதனால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.
இவரை கைது செய்ய வேண்டும் என இணையதள வாசிகள் பலரும் இணையத்தில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் இயக்குனர் லீனா மணிமேகலை தனது புதிய ஆவணப்படமான காலித் தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார். காளி பட போஸ்டர் மிகவும் ஆட்சேபனைக்குரியது என அவர் கூறியுள்ளார். இதனால் போஸ்டரையும் ஆவண படத்தையும் தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து புகாரின் பேரில் போலீசார் லீலா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.