Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் சிகெரெட்டுடன் கெத்தாக அமர்ந்திருக்கும் நடிகை ராதிகா…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!

நடிகர் விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி க்ரைம் தில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘கொலை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலாஜி குமார் இயக்க, இன்ஃபினிட்டி லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘கொலை’ படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகை ராதிகாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ராதிகா கையில் சிகரெட்டுடன் கெத்தாக அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Categories

Tech |