தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவருக்கு முன்னால் ஒரு மைக் இருக்கின்றது. அதில் சமந்தா தனது முகத்தை வெளிப்படுத்தா விட்டாலும் கைகளில் இதய சிம்பிலை அடையாளப்படுத்தி இருக்கின்றார். மேலும் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு யசோதா படத்திற்கான டப்பிங்கை பேசியிருக்கின்றார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதை நிவாரணம் அடைந்த பிறகு இதை பகிரலாம் என எதிர்பார்த்தால் நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நாள் எடுத்துக் கொள்கின்றது. நான் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நம் வாழ்க்கையில் அவ்வபோது சவால்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அவை நம் மனவலிமையை கண்டறிவதற்கு கூட இருக்கலாம். மன வலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள். விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள். தைரியமும் நம்பிக்கையும் கிடைக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றார்.