நடிகர் சிபி சத்யராஜ் நடிக்கும் ரேஞ்சர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
தமிழ் திரையுலகில் நடிகர் சிபிராஜ் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தற்போது சிபிராஜ் இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் .இந்த திரைப்படத்தில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை அடித்துக்கொன்று தின்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாராகிறது. தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் அடர்ந்த காட்டில் சிபிராஜ் நிற்கிறார். கூண்டில் புலி பிடித்து வைக்கப்பட்டுள்ளது போல் அமைந்துள்ளது .
Here’s the First look of #Ranger 🐅!#SaveTigers #BasedOnATrueStory @nambessan_ramya @iamMadhuShalini @Dharanidharanpv @kaaliactor @ArrolCorelli @tnkabilan @EditorShivaN @DoneChannel1 @VanquishMedia__ pic.twitter.com/iq6YmJYOSh
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 18, 2020