Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கையில் பதாகையுடன் 35 கி.மீ தூரம் நடந்து வந்த இளம்பெண்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அன்னூர் அக்கறை செங்கம்பள்ளி பகுதியில் பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரம் கையில் பதாகையுடன் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தொழிற்பேட்டை அமைப்பதற்காக அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருக்கும் 3,731 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மிகவும் மன உளைச்சலில் இருக்கின்றனர். மேலும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 100% நிறைவடைந்த நிலையில், அந்த திட்டம் தொழிற்பேட்டைக்கானதா? அல்லது விவசாயிகளுக்கானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே நிலத்தை கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பானு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |